ஒரே நாளில் இரண்டு நடிகைகளை மாற்றி அதிர்ச்சி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல்.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றப்பட்டிருக்கும் செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் மட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கலும் அவ்வப்போது இடம் பிடித்து வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனி ஆளாக இருந்து, தனது கனவுகளுக்காகவும் உரிமைக்களுக்காவும் போராடிக் கொண்டு குடும்பத்தையும் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது குறித்த கதையாக இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. கதையில் தற்போது விறுவிறுப்புகள் குறைந்து தேக்க நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜெனிக்கு வளைகாப்பு நடத்தி அவரை அவரது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

ஒரே நாளில் இரண்டு நடிகைகளை மாற்றி அதிர்ச்சி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல்.! 1

கதை இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து தற்போது இரண்டு நடிகைகள் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் பாக்யாவின் இரண்டாவது மருமகளாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா விலகியிருக்கிறார். அவர் விலகளுக்கான காரணத்தை இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அன்பே வா, காற்றுக்கு என்ன வேலி போன்ற சீரியல்களில் நடித்த நடிகை அக்ஷிதா அசோக் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் அவர் ரித்திகாக்கு பதிலாக நடித்திருக்கிறார். இரண்டாவதாக செழியன் உடன் தொழில் ரீதியான தோழியாக தீப்தி நடித்து வந்தார்.

அவரும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக நடிகையும் டான்ஸருமான ரேமா அசோக் இணைந்திருக்கிறார். பாக்கியலட்சுமி தொடரின் ஹிந்தி வெர்ஷினில் தந்தையைப் போலவே செழியனுக்கும் இரண்டாவது திருமணம் ஆகிவிடும். அதேபோல பாக்கியலட்சுமிக்கும் இரண்டாவதாக திருமணம் ஆகிவிடும். தமிழ் பாக்கியலட்சுமி கதையையும் அதேபோன்று நகர்த்த இருக்கிறார்களா? இல்லை வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்