பாட்டு வரிகளை மறந்து பாட முடியாமல் மேடையில் கதறி அழும் இலங்கை சிறுமி.! தேற்றிய சினேகன்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்து வரும் சரிகமப நிகழ்ச்சியில் தற்போது இலங்கையிலிருந்து வந்த அசாணி என்கிற பெண் பாட முடியாமல் தடுமாறி அழுகிறார். அவரை கவிஞர் சினேகன் தேற்றுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இலங்கையில் இருந்து பாட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் சென்னைக்கு கிளம்பி வந்தவர் அசாணி. இவருடைய பின்புலம் மிகவும் சோகமானது் தனது தாயும் தந்தையும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து ஒரு நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த நிலையில் சென்னைக்கு வர ஒன்றை லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இவரது திறமையைப் பார்த்த ஊர் மக்கள் அவர் சரிகமப நிகழ்ச்சியில் சென்று ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தங்களது கை காசுகளை போட்டு ஒன்றரை லட்ச ரூபாயை தேற்றி அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாட்டு வரிகளை மறந்து பாட முடியாமல் மேடையில் கதறி அழும் இலங்கை சிறுமி.! தேற்றிய சினேகன்.! 1

விளம்பரம்

ஸ்வரம் என்றால் என்னவென்று தெரியாத அசாணி ரேடியோவில் கேட்டு கேட்டு பாட்டை பழகியவர். அவருக்கு முறையாக பயிற்சி அளித்து இரண்டு மூன்று வாரங்கள் பார்த்த பின்பு முடிவு செய்து கொள்ளலாம் என்று நடுவர்கள் முடிவெடுத்திருந்தனர். அவரும் ஒவ்வொரு போட்டியிலும் தனது முன்னேற்றத்தை காட்டி வருகிறார். அப்படியான சூழலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் எனது தாய்க்காகவும் என்னை நம்பி அனுப்பி வைத்த ஊர் மக்களுக்காகவும் நான் வென்று காட்ட வேண்டும் என்று சொல்லி அவர் ஒவ்வொரு பூக்களுமே பாட்டை பாடுகிறார். ஆனால் பாடலுக்கு நடுவே அவருக்கு பாட முடியாமல் போகிறது.

தொடர்புடையவை  இறுதியில் சாதித்து காட்டிய கதிர், கண் கலங்க வைக்குறீங்கப்பா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாட்டு வரிகளை மறந்து பாட முடியாமல் மேடையில் கதறி அழும் இலங்கை சிறுமி.! தேற்றிய சினேகன்.! 3

விளம்பரம்

இதனால் நடுவில் கண்கலங்கி அழத் தொடங்குகிறார். அப்போது சிறப்பு விருந்தினராக வந்த சினேகன் கவிதை ஒன்றை சொல்லி அசாணியை தேற்றுகிறார். இதனால் மேலும் மனம் உடைந்து போகிறார் அசாணி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment