இறுதியில் சாதித்து காட்டிய கதிர், கண் கலங்க வைக்குறீங்கப்பா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் நால்வரின் ஒற்றுமையை குறித்து இந்த நாடகம் பேசி வருகிறது. ஆனால் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சண்டைகளையும் அவ்வப்போது காட்டி வருகிறது. அப்படி தான் தற்போது நான்கு பேரில் ஒருவரான கதிர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மளிகை கடையே கதி என இருந்த கதிருக்கு வேறு எந்த ஒரு தொழிலும் தெரியாது. தனது மனைவியின் குழந்தையின்மை மருத்துவத்திற்காக அவர் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருப்பார். அந்த கடன் பிரச்சனையால் அவர் வீட்டை விட்டும் வெளியேறி இருப்பார்.

இறுதியில் சாதித்து காட்டிய கதிர், கண் கலங்க வைக்குறீங்கப்பா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவருக்கு எந்த தொழில் செய்வது என்று தெரியாமல் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருவார். பின்னர் முல்லை கொடுத்த ஐடியாவால் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார் கதிர். ஆனால் ஹோட்டல் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை. அசைவ உணவுகள் இல்லாததால் பலரும் சாப்பிட அமர்ந்து விட்டு எழுந்து சென்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வந்தது. இதற்கிடையே முல்லையின் அக்கா மல்லி சபதம் ஒன்றை போடுகிறார். குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் அதிகம் சம்பாதித்து விட்டால் நான் இனிமேல் உங்கள் பக்கமே வர மாட்டேன் என்று கதிரிடம் சபதம் போடுகிறார்.

தொடர்புடையவை  திடீரென நாடகத்தை முடித்து பேக் செய்த செம்பருத்தி சீரியல்.! என்ன காரணம் தெரியுமா? | Sembaruthi Zee Tamil

இறுதியில் சாதித்து காட்டிய கதிர், கண் கலங்க வைக்குறீங்கப்பா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 3

விளம்பரம்

மல்லியிடம் போட்ட சபதத்தை நிறைவேற்றி காட்டுவதற்காக கதிர் ஒரு ஐடியா செய்கிறார். அதில் பிரியாணி இலவசம் என்று கடைக்கு வெளியே போர்டு வைக்கிறார். உள்ளே வந்து சாப்பிட்டு விட்டு செல்பவர்களிடம், பிரியாணி பிடித்திருந்தால் உண்டியலில் காசு போடவும் என்று கூறுகிறார். ஆனால் சாப்பிட்டுவிட்டு செல்லும் பலரும் காசு போடாமல் வெளியே போகின்றனர். இதனால் கோபமான முல்லையின் தாய் அந்த உண்டியலை எடுத்து உடைக்கிறார். அதை எண்ணிப் பார்க்கும்போது போட்ட முதலுக்கு அதிகமாகவே லாபம் கிடைத்திருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment