கணவனின் துணையுடன் தடைகளை மீறி ஐபிஎஸ் ஆன சந்தியா.! வேற லெவல் ப்ரோமோ

ராஜா ராணி சீசன் 2 தொடரில் தற்போது சந்தியா தனது லட்சியமான ஐபிஎஸ் கனவை நிறைவேற்றி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் ராஜா ராணி சீசன் 2. இது ஹிந்தியில் ஒளிபரப்பான ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான அந்த தொடரை தமிழில் “என் கணவன் என் தோழன்” என்று விஜய் டிவியில் ஒளிபரப்பினர். அந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. எனவே அந்த கதையை மையப்படுத்தி தற்போது தமிழில் எடுக்கப்பட்டு வரும் தொடர் தான் ராஜா ராணி சீசன் 2. இதில் சரவணன் கதாபாத்திரத்தில் சித்துவும், சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர்.

கணவனின் துணையுடன் தடைகளை மீறி ஐபிஎஸ் ஆன சந்தியா.! வேற லெவல் ப்ரோமோ 1

விளம்பரம்

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஒரு பெண்ணின் தாய் தந்தையர் ஒரு விபத்தில் இறந்துவிட, அவரை இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவர். திருமணமான பின்பு அவரது மாமியார் சந்தியாவின் ஐபிஎஸ் கனவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.ஆனால் மனைவியின் கனவை புரிந்து கொள்ளும் கணவர், எப்படி தனது மனைவியின் கனவை நிறைவேற்றப் போகிறார்? தனது தாயாரின் தடைகளை எல்லாம் மீறி மனைவியெ ஐபிஎஸ் ஆக்குவாரா இல்லையா என்பது குறித்து கதை நகர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஐபிஎஸ் ட்ரைனிங்க்கு கணவர் அழைத்து செல்கிறார். அங்கு வெற்றிகரமாக ட்ரெய்னிங்கை முடிக்கிறார் ஹீரோயின் சந்தியா.

தொடர்புடையவை  சூரரைப்போற்று எடுக்க சொன்னா 'பிதாமகன்' எடுத்து வச்சி இருக்கீங்களேடா..நாசம் செய்யும் ரீமேக்

கணவனின் துணையுடன் தடைகளை மீறி ஐபிஎஸ் ஆன சந்தியா.! வேற லெவல் ப்ரோமோ 3

விளம்பரம்

பல போராட்டங்களுக்கு இடையில் தனது கணவனின் துணையோடு ஐபிஎஸ் கனவை நிறைவேற்றியுள்ளார் சந்தியா. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

கணவனின் துணையுடன் தடைகளை மீறி ஐபிஎஸ் ஆன சந்தியா.! வேற லெவல் ப்ரோமோ 5

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment