அடேங்கப்பா.! பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்காவா இது? செம்ம அழகா இருக்காங்களே.!

வெளியிட்டது

சினிமா துறையில் இருக்கும் துணை நடிகர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்காது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் மட்டுமே முன்னேற முடியும். சிலர் ஓரிரு படங்களில் துணை நடிகர்களாக வந்து நடிப்பில் வந்து அசத்தியிருந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் ஏழ்மை நிலையிலேயே இருக்கின்றனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒருவர் தான் கம்பம் மீனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இவர் சண்டை மூட்டி விடும் அண்ணியாகவே வருகிறார். ஆனாலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம்.

அடேங்கப்பா.! பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்காவா இது? செம்ம அழகா இருக்காங்களே.! 1

பாண்டியன் ஸ்டோர்ஸை இயக்கும் அதே இயக்குனர் தான் பாக்கியலட்சுமி என்கிற சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த நாடகத்திலும் கம்பம் மீனாவுக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர். அதில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் பாக்யாவின் வீட்டில் சமையல்கார பெண்ணாக நடித்து வருகிறார் கம்பம் மீனா. இவர் கதை ஆரம்பம் முதல் இன்று வரை பாக்யா உடனே பயணித்து வரும் ஒரு கதாபாத்திரமாக தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி வருகிறார். பாண்டியன் ஸ்டோர் ஐ விட பாக்கியலட்சுமி சீரியலில் மீனாவின் நடிப்பை பலரும் விரும்புகின்றனர். ஏனெனில் கணவனால் ஏமாற்றப்பட்ட பாக்யாவிற்கு செல்வி மிக உறுதுணையாக இருக்கிறார். குடும்பத்தில் உள்ள பலரும் பாக்யாவை எதிர்க்கும் போதும் கூட சமையல்கார பெண்ணான செல்வி மட்டும் பாக்யாவிற்கு ஆதரவு கொடுத்து அவருடனே இருக்கிறார்.

இதனால் மீனாவுக்கு இந்த நாடகத்தின் மூலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இவர் திருமண கோலத்தில் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தான் 14 வருடமாக திரைத்துறையில் இருந்த போதும் முதல்முறையாக இப்படி ஒரு போட்டோ சூட் செய்துள்ளதாக பதிவிட்டு இருக்கிறார். அவரின் புகைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்