பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட நடிகர்.! இனி இவருக்கு பதில் இவர்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலிலிருந்து நடிகர் ஒருவர் விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு பதிலாக மற்றொரு நடிகர் இன்றைய எபிசோடு முதல் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சீரியல் கதைப்படி தற்போது பாக்யா அரசு பொருட்காட்சியில் கேண்டீன் ஆர்டர் பிடித்திருக்கிறார். அங்கு அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் சமாளித்து எப்படி அந்த ஆர்டரை அவர் சிறப்பாக செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட நடிகர்.! இனி இவருக்கு பதில் இவர்.! 1

நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க கோபி பாக்யாவின் வீட்டிலேயே வந்து தங்கி இருக்கிறார். அவருக்கு வங்கியில் இருந்து கடனை திருப்பி செலுத்துமாறு அதிகாரிகள் வந்து தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றனர். இதை அவர் ராதிகாவிடமிருந்து மறைத்து தனியாக கையாண்டு கொண்டிருக்கிறார். இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வந்தால் என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் ராதிகா பாக்யாவை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பழனிச்சாமி பாக்யாவுடன் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர் இடையே எழுந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் கதை நகர்ந்து கொண்டிருக்க இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.


அதாவது ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் நீண்ட நாட்களுக்கு முன்பே சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் வெளிநாடு சென்று விட்டது போல் காட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெனி – செழியன் இடையை பிரச்சினை இருப்பதால் அவரது கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து இருக்கின்றனர். இதற்காக வேதராஜன் தசரதி ஜெனியின் அப்பாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ணருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர். மேலும் சமீபத்தில் முடிவடைந்த ‘ஈரமான ரோஜாவே 2’ தொடரில் கதாநாயகர்களின் தந்தையாக நடித்து இருந்தார்.


இந்த நிலையில் அவர் தற்போது ‘பாக்கியலெட்சுமி’ சீரியலில் ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அவரின் எபிசோடுகள் இன்று முதல் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்