பாக்கியா வீட்டிற்கு வந்து அனைவருடன் சேர்ந்து நிற்கும் கோபி..! ராதிகாவை கைவிட்டாரா கோபி… ! ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல்

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது பாக்கியலட்சுமி தொடருக்கு தான். அந்தளவுக்கு தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இந்த தொடர் உருவாக்கி உள்ளது. பல வீட்டில் நடக்கும் உண்மை நிகழ்வுகளுடன் இந்த தொடரின் கதை ஒத்துப்போவதால் பல குடும்ப தலைவிக்கும் பிடித்தமான தொடராக பாக்கியலட்சுமி மாறி உள்ளது.

பாக்கியா வீட்டிற்கு வந்து அனைவருடன் சேர்ந்து நிற்கும் கோபி..! ராதிகாவை கைவிட்டாரா கோபி... ! ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல் 1

வாரம்தோறும் பாக்யலக்ஷ்மியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் இயக்குனர் தனது கதையின் மூலம் அதிகரிக்க செய்து வருகிறார். தற்போது தொடரில் பாக்கியாவுக்கும் கோபிக்கும் இடையே சமையல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற இருவரும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியாவின் வீட்டில் கோபி பாக்கியாவின் அருகில் நிற்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கோபி பாக்கியா உடன் சேர்ந்துவிட்டாரா என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தளவுக்கு புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்