பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் தாமரை செல்வி. நாடக கலைஞரான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து நடிகையாக உருவெடுத்தார்.

சின்னத்திரையில் இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் வரவே அதனையும் சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீமற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கு தற்போது மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது இவர் கணவருடன் கோவாவிற்கு விடுமுறை சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மாடர்ன் உடையில் தாமரையை பார்த்த ரசிகர்கள் இது நம்ம தாமரை செல்வியா என ஆச்சரியமாக பார்த்து புகைப்படத்திற்கு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
