உனக்காக தான் நான் அனாதையா நிக்கிறேன் ராதிகா.! ராதிகாவின் மனசை மாற்றிய கோபி

வெளியிட்டது

விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு வெளியாகும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டியுள்ளது. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவிக்கு தனது கணவனின் கள்ளக்காதல் பற்றி தெரிய வருகிறது. இதனால் அவர் மனம் உடைந்து போய் தனது கணவருக்கு விவாகரத்தும் கொடுத்து விட்டார். அதில் ஒரு ட்விஸ்ட் என்றால் தனது கணவரின் கள்ளக்காதல் தனது நெருங்கிய தோழி என்பதுதான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. இதனால் மனமுடைந்து போன பாக்கியலட்சுமி தனது கணவரிடம் கடுமையாக சண்டையிடுகிறார். கடந்த ஒரு மாத காலமாகவே கோபிக்கும் பாக்யாவிற்கும் நடக்கும் சண்டையையே காட்டி வந்தனர். நடு வீட்டில் நின்று கொண்டு கோபியிடம், பாக்கியா கேள்வி கேட்பது போல பாக்யா பேசும் வசனங்கள் சிறிது சலிப்பை ஏற்படுத்தின. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உனக்காக தான் நான் அனாதையா நிக்கிறேன் ராதிகா.! ராதிகாவின் மனசை மாற்றிய கோபி 1

இந்த நிலையில் கடைசியாக கோபியை இது என் வீடு, ஆண்கள் என்ன வேண்டுமானாலும் தவறு செய்வீர்கள், பெண்கள் பொறுத்துக் கொண்டு போக வேண்டுமா? நீங்கள் தான் வெளியே வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று பாக்யா, கோபியின் துணிகளை ஒரு பெட்டியில் வைத்து அவரை வெளியே போகச் சொல்கிறார். ஆனால் கோபியோ இது நான் கட்டிய வீடு, அதற்காக வங்கியில் கடன் வாங்கி 40 லட்சம் செலவு செய்து இந்த வீடு கட்டி இருக்கிறேன் என்று சண்டையிடுகிறார். அதற்கு பாக்யா நான் அந்த 40 லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் மனமுடைந்த கோபி நேராக ராதிகா வீட்டுக்கு செல்கிறார். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே கோபி பற்றிய உண்மைகளை தெரிந்த பின்பு ராதிகா கோபியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால் ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் கோபியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆனதை அறிந்த அவர்கள் ராதிகாவின் மனதை மாற்ற நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கோபி நேராக ராதிகாவை சந்தித்து மன்னிப்பு கோருகிறார். அதோடு ப்ரோமோ முடிகிறது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோபி கேட்டு, ராதிகா அதற்கு சம்மதிக்காத போது தற்கொலை வரை செய்து கொள்வேன் என்று மிரட்டி அவர் மனதை மாற்ற முயற்சி செய்ய உள்ளதாகவும், பாக்யாவை ஜெயிப்பதற்காக கோபி பல சதிகளை இனிமேல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்