இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வரும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இவர்களுடன் டான்சிங் ரோஸ் சபீர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்.

இந்த படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பா. ரஞ்சித்தின் சொந்த நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் ட்ரைலரும் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் நடித்த விருமன் படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டியை சமாளிப்பதற்காக விருமன் ஆகஸ்ட் 12ஆம் தேதியே வெளியானது.

சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் நகர்கிறது பற்றிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் தன்பால் வேட்பாளர்களின் கொடியை பிரதிபலிக்கும் வண்ணம், வண்ணங்கள் இருந்தது. இதனால் இந்த படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரிலும் அதுபோன்ற வசனங்கள் இருக்கின்றன. எனவே தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய படமாக இது இருப்பின், இது தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த முதல் தமிழ் சினிமா என்ற பெருமையை இந்த படம் பெறும். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலரை நீங்களும் காண…Watch the trailer video below..
Youtube Video Code Embed Credits: Think Music India