நீ நாசமா போய்டுவ, ராதிகாவை கிழித்து தொங்கவிட்ட கோபியின் அம்மா ஈஸ்வரி

வெளியிட்டது

பாக்கிய லக்ஷ்மி சீரியல் தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவர் செய்யும் செயலால் கோபமான ராதிகா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். பாக்கியலட்சுமி உடனான சண்டைக்குப் பிறகு நேராக ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி, அங்கு அவரிடம் தன்னை அடைக்கலம் கொடுக்குமாறு வேண்டுகிறார். ஆனால் ராதிகா மனம் மாறாமல் அவரிடம் எதிர்த்து சண்டையிடுகிறார். பின்னர் பாக்கியலட்சுமி மாமியாரும் கோபியின் தாயாருமான ஈஸ்வரி, நேராக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். உன்னால் தான் என் மகன் இப்படி ஆகிவிட்டான், என் குடும்பம் இப்படி சீரழிந்து இருக்கிறது என்று ராதிகாவுடன் கடுமையாக சண்டையிடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ நாசமா போய்டுவ, ராதிகாவை கிழித்து தொங்கவிட்ட கோபியின் அம்மா ஈஸ்வரி 1

அப்பொழுது அவர் ராதிகாவின் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் திறந்து என் மகன் எங்கே இருக்கிறான்? கோபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள். என்று கேட்கிறார். அதை பார்த்து ராதிகாவின் தாயார் நீங்கள் செய்யும் செயல் மிகக் கேவலமாக இருக்கிறது. அவரை ஒன்றும் நாங்கள் ஒளித்து வைக்கவில்லை என்று கூறுகிறார். பின்னர் ராதிகாவிடம் நீ நல்லாவே இருக்க மாட்ட, எங்கள் குடும்பத்தை சீரழித்த நீ நன்றாகவே இருக்க மாட்டாய் என்றெல்லாம் கடுமையாக சாபம் விடுகிறார். இதை பார்த்த ராதிகா கோபத்துடன் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போங்க என்று கடுமையாக சத்தமிட்டு துரத்தி விடுகிறார்.

இந்த சீரியல் ஏற்கனவே ஒரு ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். அந்த ஹிந்தி கதைப்படி ராதிகா, வில்லியாக மாறுவார். எனவே தற்போதும் ராதிகா வில்லியாக மாறும் தருணம் நெருங்கியுள்ளது. இவர் கோபியை திருமணம் செய்து கொள்வாரா? பாக்கியலட்சுமி நிலை என்ன, அவர் அடுத்து எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதெல்லாம் கேள்விக்குறிதான். கதை எவ்வாறு இருக்கப் போகிறது, எப்படி கொண்டு செல்ல போகிறது என்பது போகப் போகத்தான் தெரியவரும்.. தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்