அம்மாடி இவ்ளோ பெரிய வீடா? ஆல்யாவிற்க்காக பிரம்மாண்ட வீடு கட்டும் சஞ்சீவ், வைரலாகும் வீடியோ

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்றவர் ஆல்யா மானசா. இவருக்கு அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் இவர் சஞ்சீவ் கார்த்திக் உடன் இணைந்து செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகத்திற்கு பின்னர் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மக்களும் இவரை ஆதரித்தனர். அதேபோல சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார் பின்னர் பட வாய்ப்புகள் குறையவே சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்தார். இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சஞ்சீவுக்கும், ஆல்யாவிற்கும் காதல் மலர்ந்தது. ஆல்யா ஏற்கனவே இன்னொருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் காதல் முறிவு ஏற்பட்டு சஞ்சீவை காதலிக்கத் தொடங்கினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அம்மாடி இவ்ளோ பெரிய வீடா? ஆல்யாவிற்க்காக பிரம்மாண்ட வீடு கட்டும் சஞ்சீவ், வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆலியா இரண்டாவது முறையாக ராஜா ராணி 2 என்ற சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இரண்டாவது பிரசவத்தின் காரணமாக அவர் அந்த நாடகத்தை விட்டு விலகி விட்டார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் கயலுக்கு ஜோடியாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு youtube சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்களது மூத்த மகள் ஐலா செய்யும் குறும்புகளை அவர்கள் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் டூர் செல்வது, vlogs வீடியோக்கள், அவர்கள் வீட்டில் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் போன்றவற்றையும் வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்களை பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல.! ஆஸ்கர் குடுங்கடா.! ஜனனியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

அம்மாடி இவ்ளோ பெரிய வீடா? ஆல்யாவிற்க்காக பிரம்மாண்ட வீடு கட்டும் சஞ்சீவ், வைரலாகும் வீடியோ 3

விளம்பரம்

சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக வலம் வரும் இவர்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் தான் குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் புதிதாக வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்று பல வீடியோக்களில் தங்களது ஆசையை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது ஆசை மனைவி ஆல்யா மற்றும் தனது குழந்தைகள் ஐலா மற்றும் அர்ஷ்க்காக சஞ்சீவ் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sanjiv and Alya

விளம்பரம்

Leave a Comment