இனிமே வர எபிசோட் எல்லாம் நெருப்பு மாதிரி இருக்கும்..! பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் நாட்கள் நெருப்பு போல் இருக்கும் என்றும், ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் கோபி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் வரும் நாட்களில் எல்லாம் கோபிக்கு ராதிகா, மகன்கள், அம்மா, அப்பா என அனைவரிடமிருந்தும் அடி இருக்கிறது என்றும் அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பார்வையாளர்கள் உங்களுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கிறது என்றும் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த சீரியலின் கதாநாயகன் கோபி இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு தற்போது படாத பாடுபட்டு வருகிறார். தற்போது கதைப்படி கோபி இரண்டாவது மனைவி ராதிகாவின் தொல்லையால் அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமே வர எபிசோட் எல்லாம் நெருப்பு மாதிரி இருக்கும்..! பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ.! 1
ஆனால் கோபியின் தாயார் கோபியை மீண்டும் தங்களது வீட்டிற்கு அழைத்துக் கொள்ள திட்டமிடுகிறார்., அவர் இரண்டாவது மனைவி ராதிகாவை விட்டு பிரிந்து தங்களுடன் வந்து வசிக்குமாறு கோபியை வற்புறுத்துகிறார். கோபியின் தாயார், தந்தை, மகன்கள் அனைவரும் மூத்த மனைவியான பாக்கியாவின் வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். அனைவரும் பாக்யாவிற்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்கள். இது ராதிகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு தானே தன்னை திருமணம் செய்தார்.? பின்னர் எதற்கு பாக்யா உடனே அனைவரும் இருக்கிறார்கள்? என்று ராதிகா கோபம் கொள்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கோபியும் குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்க, அவரை மீட்டு செழியன் பாக்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார். இதனால் கடுப்பான ராதிகா பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு தற்போது பாக்யாவின் வீட்டிற்க்கே வந்து விட்டார். மேலும் பாக்யாவை வீட்டை விட்டு வெளியேறுமாறும் கூறி இருக்கிறார்.


இதனால் இந்த தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கோபி, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இனி வரம் கூடிய நாட்கள் எல்லாம் நெருப்பு மாதிரி இருக்கும். ராதிகா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை. அனைத்து தவறுகளுக்கும் நான் தான் காரணம், இனி பாக்கியலட்சுமி சீரியல் பார்வையாளர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் காத்திருக்கிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு கீழே சிலர் நீங்கள் கஷ்டப்பட போவதை நாங்கள் கண்டு ரசிக்க போகிறோம் என்று சொல்லி காமெடியாக பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்