நடிகர் விமல், அனிதா சம்பத், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெய்வம் மச்சான் திரைப்படம் மிக நன்றாக இருப்பதாகவும் களவாணி படத்திற்கு பின்னர் இந்த படம் விமலுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விமல் 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். காமெடியாக பேசும் இவரது பேச்சுக்கள் இவரை அடுத்தடுத்த படங்களுக்கு நகர்த்திச் சென்றது. தூங்கா நகரம், களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார் விமல். ஆனால் 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் சரியாக அமையவில்லை. இவர் கடைசியாக கன்னி ராசி என்கிற படத்தில் மட்டுமே நடித்திருந்தார். விலங்கு என்கிற வெப்சைட் நடித்தார். இது இவருக்கு மீண்டும் திரைத்துறைக்கு வருவதற்கான ஒரு கம் பேக்காக அமைந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கைவசம் ஏழு படங்களில் நடித்து வருகிறார் விமல். குல சாமி, தெய்வமச்சான், எங்க பாட்டன் சொத்து, சண்டைக்காரி, மஞ்சக்குடை, துடிகரங்கள் போன்ற ஏழு படங்களில் நடித்து வருகிறார். இதில் குலசாமி மற்றும் தெய்வம் மச்சான் ஆகிய இரு படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. தெய்வ மச்சான் படத்தில் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்டின் நிர்மல் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். உதய் ப்ரொக்டக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு காட்வின் என்பவர் இசையமைத்திருக்கிறார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி அம்சத்துடன் இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாக கூறினர்.

மேலும் விமல் சில வருடங்களாக நடித்த சில படங்கள் சரியாக ஓடாத நிலையில் அவருக்கு இந்த படம் மீண்டும் ஒரு கம் பேக்காக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர்கள் பேசிய அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Chennai Day