ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி.! பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. தனது கல்லூரி கால தோழியான ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் கோபி. அந்த திருமண வேலைகளில் சமையலுக்காக பாக்யாவும் அதே மண்டபத்தில் இருக்கிறார். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக மண்டபத்திற்கு வரும் கோபியின் அப்பா கோபியை திட்டித் தீர்க்கிறார். ஆனால் கோபி தந்தையை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். வேலைக்காரப் பெண் செல்வியும் சேர்ந்து கொண்டு கோபியை திட்டி தீர்க்கிறார். கல்யாணம் ஆகி பேரன் பேத்தி பார்க்கும் வயதில் மாலையும் கழுத்துமாக இப்படி நிற்கிறீர்களே வெட்கமா இல்லையா என்றெல்லாம் கோபத்துடன் கேட்கிறார்.

ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி.! பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 1

ஆனால் பாக்யா அனைவரையும் சமாதானப்படுத்தி தனக்கு இந்த கல்யாண ஆர்டர் மிகவும் முக்கியம் என்று கூறுகிறார். மேலும் தனது மாமனாரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சமையல் வேலைகளை தொடர்கிறார். வீட்டிற்கு சென்ற கோபியின் அப்பா ராமமூர்த்தி தனது மனைவி ஈஸ்வரியிடம் உண்மைகளை போட்டு உடைக்கிறார். கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஈஸ்வரிடம் கூறுகிறார். இதனால் ஈஸ்வரியும் இனியாவு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். மூவரும் கிளம்பி திருமணத்தை நிறுத்துவதற்காக மண்டபத்திற்கு கிளம்புகின்றனர்.

ஆனால் அவர்கள் மண்டபத்திற்குள் வருவதற்குள், கோபி ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்