கோபி வீட்டிற்கு வந்த ராதிகா.! வசமாக மாட்டிக்கொண்ட கோபி..வேற லெவல் ப்ரோமோ😂

வெளியிட்டது

விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிய லெட்சுமி. இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சுசித்ரா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “சைவம்” என்ற படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பாக்கிய லெட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இவரின் யதார்த்த நடிப்பும், நம் வீட்டில் நம் அம்மா போலவே வெகுளி கதாபாத்திரமாக இருப்பதால் இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. கீழே உள்ள ப்ரோமோவை பாருங்கள் 

கோபி வீட்டிற்கு வந்த ராதிகா.! வசமாக மாட்டிக்கொண்ட கோபி..வேற லெவல் ப்ரோமோ😂 1

குடும்ப பாங்கான தொடர்களையும், வில்லன் வில்லி கதாபாத்திரங்களும், நெகடிவ் கதாபாத்திரங்களும் குறைவாக இருப்பதால் விஜய் டிவி தொடர்களை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர். வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர். இதில் கதாநாயகன் கோபிக்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும், அவர் தனது கல்லூரி கால தோழியிடன் மீண்டும் தொடர்பில் இருப்பது போன்றும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தோழியை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டுள்ளது. YouTube Video Code Embed Credits: Vijay Televison

 

இந்த கள்ளத் தொடர்பை கண்டுபிடித்த ஒரே ஒரு ஆள் கோபியின் அப்பாவும் படிக்கட்டில் வழுக்கி விழுந்து கை கால் செயலிழந்து பேச முடியாமல் இருப்பதாக காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோபி எப்போது மாட்டுவார், ராதிகாவிற்கு எப்போது உண்மை தெரிய வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராதிகா கோபியின் அப்பா பிறந்த நாளைக்காக கோபியின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக மாட்டுவார் என்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below video

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்