மிருகம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் ஆதி. மற்ற நடிகர்களைப் போல அல்லாமல் சற்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த மிருகம், அரவாண், மரகத நாணயம், ஈரம் போன்ற படங்கள் வித்தியாசமான கதை அம்சம் கொண்டவைகள். சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் தெலுங்கு திரை உலகிற்கு கவனத்தை திருப்பியுள்ளார் ஆதி. இவருக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது. தற்போது இவர்களின் நலங்கு வைக்கும் விழா நடந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை நிக்கி கல்ராணி முதன்முதலில் தமிழில் அறிமுகமான படம் “டார்லிங்”. ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கவர்ச்சியை கூடுதலாக காண்பித்ததால் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஆதியிடன் இணைந்து நடித்தார். மரகத நாணயம் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென ஒருநாள் ஆதியும், நிக்கி கல்ராணியும் நிச்சயம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து முடித்தனர். Youtube Video Code Embed Credits: Little Talks

தற்போது இருவருக்கும் நலங்கு வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆதியும், நிக்கியும் மஞ்சளில் குளித்தே விட்டனர். மேலும் இருவரும் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். கோலிவுட்டில் அடுத்த க்யூட் பேர் ரெடி என்று அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நலங்கு வீடியோவை நீங்களும் காண… Watch the below video..