பூதத்துடன் சேர்ந்து ரகளை செய்யும் வைபவ், லியோனி.! ‘ஆலம்பனா’ ட்ரைலர் வெளியானது.!

நடிகர் வைபவ், பார்வதி நாயர், முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஆலம்பனா’. விரைவில் திரையில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சென்னை 28’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘சரோஜா’ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் ‘மேயாத மான்’, ‘கப்பல்’, ‘லாக்கப்’, ‘நான் பேய் பேசுறேன்’ போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மேலும் ‘மலேசியா டூ அம்னீசியா’ என்கிற வெப் தொடரிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது நடிக்கும் திரைப்படம் தான் ‘ஆலம்பனா’. இந்த படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூதத்துடன் சேர்ந்து ரகளை செய்யும் வைபவ், லியோனி.! 'ஆலம்பனா' ட்ரைலர் வெளியானது.! 1
1979ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ரஜினி மற்றும் கமல் நடிப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பூதமாக நடித்திருந்த அசோகன் ‘ஆலம்பனா’ என அடிக்கடி கூறுவார். அதையே டைட்டிலாக வைத்து தற்போது 40 ஆண்டுகள் கழித்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கான்செப்ட்டில் ஒரு பேண்டஸி ஜானரில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. 2021ம் ஆண்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், சில காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. காளி வெங்கட், ஆனந்தராஜ், யோகி பாபு, பாண்டியராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல காமெடி பட்டாளங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  முழு அசுரனாக மாறிய சூர்யா..!அனல்பறக்க வெளியாகிய கங்குவா படத்தின் ட்ரைலர்..!

பூதத்துடன் சேர்ந்து ரகளை செய்யும் வைபவ், லியோனி.! 'ஆலம்பனா' ட்ரைலர் வெளியானது.! 3

இந்தப் படத்தை பாரி கே விஜய் இயக்க, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் தற்போது ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ட்ரைலரை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment