Categories: சினிமா

மோகன் ஜி இயக்கும் “பகாசுரன்” படத்தில் இருந்து முதல் சிங்கிள் “சிவ சிவமயம்” வெளியானது.!

வெளியிட்டது

பகாசுரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான சிவ சிவமயம் பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தற்போது இயக்குனர் செல்வராகவனை வைத்து “பகாசுரன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். வெகு நாட்களுக்குப் பிறகு கதாநாயகனாக செல்வராகவன் களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சர்ச்சையான கதைகளை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் இயக்கிய திரௌபதி என்னும் கதை மிகச் சர்சையானது. குறிப்பாக ஜாதி அரசியல், நாடகக் காதல் என்று படம் முழுவதும் அதை சுற்றியே இருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மோகன் ஜி இயக்கும் "பகாசுரன்" படத்தில் இருந்து முதல் சிங்கிள் "சிவ சிவமயம்" வெளியானது.! 1

ஏற்கனவே மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் இதே போல் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி ஓய்ந்தது. ஆனாலும் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமாக இத்தகைய படங்கள் நன்றாக வசூலை குவித்தது. எப்போதும் ரிச்சர்ட் ரிசியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து வந்த மோகன்ஜி தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை எடுத்துள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்த மோகன் ஜி, “ஈசன் அருள்”, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்றெல்லாம் பதிவிட்டு போஸ்டர்களை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சைக்கோ கொலையாளி போல் செல்வராகவன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் படத்திலிருந்து இன்று முதல் சிங்கிள் பாடலான சிவம் சிவமயம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதில் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு “என் அப்பனல்லவா, என் தாயுமல்லவா” என்ற பாடலை செல்வராகவன் பாடுகிறார். மேலும் டீசர் வெளியான போதே உங்கள் பிள்ளைகள் அறைக் கதவுகளை மூடிக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்ற வசனங்கள் இருந்ததால் இந்த படமும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்