விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிய லெட்சுமி. வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் கோபி என்ற கதா பாத்திரத்தில் கதாநாயகனாக நடிப்பவர்தான் சதீஷ். இதில் கதாநாயகன்-க்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும், அவர் தனது கல்லூரி கால தோழியிடன் மீண்டும் தொடர்பில் இருப்பது போன்றும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தோழியை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் கதாநாயகி சுசித்ராவின் யதார்த்த நடிப்பு, நம் வீட்டில் நம் அம்மா போலவே வெகுளி கதாபாத்திரமாக இருப்பதால் இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கோபியின் கள்ளக்காதலை பாக்கியா கண்டுபிடிப்பாரா இல்லையா? என்பது தான் கதையின் விறுவிறுப்புக்கு காரணம். தற்போது கோபியின் அப்பா பிறந்த நாளைக்கு வீட்டிற்கு வரும் ராதிகாவிடம் இருந்து கோபி தப்பிப்பாரா? என்பது தான் இந்த வாரத்தின் ட்விஸ்ட். சதீஷ் இப்படி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இவருக்கு வெளியே பல எதிர்ப்புகள் உள்ளன. நாடகத்தை நாடகமாக பாருங்கள், கதைப்படி அந்த கதாபாத்திரம் அப்படி என்று பலமுறை சமூக வலைத்தளங்களில் தோன்றி விளக்கமளித்துவிட்டார். ஆனாலும் அவரை இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மக்கள் தப்பு தப்பாக திட்டுவதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் பேட்டியளித்து இருந்தார். Embed Credits: Tamil Viral Videos 24×7
தற்போது சதீஷ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஏற்கனவே ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்து இருந்ததாகவும் அதில் தன்னை கண்டபடி திட்டி மெசேஜ் வந்ததால் அதை டெலிட் செய்து விட்டதாகவும் கூறினார். மேலும் நானும் ஒரு மனுஷன் தான் என்றும், கண்டபடி திட்டாதீர்கள் என்று மனம் நொந்து பேசிக்கொண்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch below video..