பாக்யா மீது காதலில் விழுந்த பழனிச்சாமி.! பாக்யா பழனிச்சாமி காதல் ட்ராக்கா? அதிர்ச்சி ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பழனிச்சாமிக்கு பாக்யா மேல் காதல் வருவது போன்ற ப்ரோமோவை நாடகக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடராக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்யா மீது காதலில் விழுந்த பழனிச்சாமி.! பாக்யா பழனிச்சாமி காதல் ட்ராக்கா? அதிர்ச்சி ப்ரோமோ 1

இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் பாக்கியாவின் கணவர் கோபி இரண்டாவதாக தனது தோழி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். மூத்த மனைவி பாக்யாவிடம் இருந்து அவர் விவாகரத்தும் பெற்று விடுகிறார். பின்னர் பாக்யா ஆங்கில வகுப்பிற்கு செல்லும் பொழுது அங்கு பழனிச்சாமி என்பவருடன் அறிமுகம் ஏற்படுகிறது. இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்த நிலையில் பழனிச்சாமியின் பிறந்த நாள் ஏற்பாடுகளை பாக்யா கவனித்து வருகிறார்.

அப்போது அங்கு பாக்கியா பழனிச்சாமியின் குடும்பத்தாரை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார். இதைப் பார்க்கும் பழனிச்சாமிக்கு பாக்யா மீது காதல் வருவது போல காட்டப்படுகிறது. இதனால் தற்போது இந்த கதை விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்