உங்க அப்பன் என்ன மலேசிய பிரதமரா? உண்மையாவே உங்க அப்பா இருக்காரா? இல்ல கற்பனையா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ரோகிணியின் தந்தை வருவாரா? மாட்டாரா? என்று விஜயா கோபத்துடன் ரோகிணியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்க அப்பா என்ன மலேசியாவிற்கே பிரதமரா? அவர் இப்போது வரவில்லை என்றால் உனக்கு இந்த வீட்டில் இடம் இருக்காது என்று சொல்லி ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க அப்பன் என்ன மலேசிய பிரதமரா? உண்மையாவே உங்க அப்பா இருக்காரா? இல்ல கற்பனையா? 1

விளம்பரம்

ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். அவருக்கு தந்தையே கிடையாது. தந்தை சிறுவயதிலேயே இறந்து விடுகிறார். ஆனால் இந்த உண்மைகள் அனைத்தையும் மறைத்து, தான் ஒரு பெரிய பணக்காரர் என்றும், தன்னுடைய தந்தை மலேசியாவில் தொழிலதிபர் என பொய் சொல்லி மனோஜை ரோகிணி திருமணம் செய்து கொள்கிறார். மேலும் தன்னுடைய தாயார் இறந்ததற்கு தந்தை தான் காரணம் என்பதால் நான் அவரிடம் பேசுவதில்லை எனவும் மனோஜ் வீட்டில் அவர் பொய் கூறுகிறார்.

தொடர்புடையவை  கதிரையும் ஞானத்தையும் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.! எதிர்நீச்சல் ப்ரோமோ

உங்க அப்பன் என்ன மலேசிய பிரதமரா? உண்மையாவே உங்க அப்பா இருக்காரா? இல்ல கற்பனையா? 3

விளம்பரம்

இதற்கிடையில் விஜயா ரோகினியின் தந்தையை பார்க்க வேண்டும் என அவரை வரச் சொல்கிறார். தாலி பிரித்து கோர்க்கும் வைபவத்திற்கு தனது தந்தை வருவார் என்று ரோகிணி பொய் சொல்கிறார். ஆனால் ரோகிணியின் தந்தை வரவே இல்லை. இதனால் கடுப்பான விஜயா தற்போது ரோகிணியிடம் காட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..!  கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment