அமெரிக்காவில் நடுரோட்டில் அமர்ந்து சுடச்சுட சாம்பார் சாதம் சாப்பிட்ட பாலா மற்றும் மணிமேகலை..!

வெளியிட்டது

அமெரிக்காவில் நடுரோட்டில் அமர்ந்து கலக்கப்போவது யாரு பாலாவும், மணிமேகலையும் அவரைக்காய் சாம்பார் சாதம் சாப்பிட்டு கொண்டிருக்கும் வீடியோவை தற்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பாலா. இவர் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமெடி செய்திருந்தாலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில் சீசன் ஒன் தொடங்கி சீசன் 3 வரை கோமாளியாக கலந்து கொண்ட பாலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பாலா சொல்லும் டைமிங் காமெடிகளும், மற்றவர்களை கலாய்த்து அவர் பேசும் பேச்சுக்களுக்காகவே பாலாவை பின்தொடர்பவர்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடுரோட்டில் அமர்ந்து சுடச்சுட சாம்பார் சாதம் சாப்பிட்ட பாலா மற்றும் மணிமேகலை..! 1
தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நடந்து வரும் நிலையில் பாலா இதில் கோமாளியாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதே நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த மற்றொருவர் தான் மணிமேகலை. சமீபத்தில் அவர் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவர் அதே சீசனில் தொகுப்பாளினியாக பங்கேற்று இருக்கிறார். சன் மியூசிக்கில் பல ஆண்டுகளாக வி.ஜேவாக இருந்து வந்த மணிமேகலை தற்போது தனது அயராத உழைப்பால், இன்று முன்னேறி பல மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் நமது சொந்த உழைப்பில் கார், பைக், வீடு, நிலம் என்று வாங்கி முன்னேறி காட்டியிருக்கிறார். பாலாவும் மணிமேகலிலும் இணைந்து தற்போது அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றனர்.


இவர்கள் இருவரும் இணைந்தாலே காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது. இருவரும் இணைந்து அமெரிக்காவில் நடுரோட்டில் அமர்ந்து சுடச்சுட அவரைக்காய் சாம்பார் சாதம் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்