கையில் துப்பாக்கி, தலையில் ர த் த காயம்.! கேப்டன் மில்லர் First லுக் போஸ்டர் வெளியானது.!

நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலமாக நடிகராக அறிமுகமானார் தனுஷ். அதன் பின்னர் இவர் திருடா திருடி, சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், மூணு, மயக்கம் என்ன, எதிர்நீச்சல், மரியான், அனேகன், மாரி, வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி இரண்டு படங்களும் 100 கோடி வசூலில் இணைந்து இருந்தது.

தொடர்புடையவை  யப்பா மூச்சு வாங்குதே.! வெறித்தனமாக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் வீடியோ.!

கையில் துப்பாக்கி, தலையில் ர த் த காயம்.! கேப்டன் மில்லர் First லுக் போஸ்டர் வெளியானது.! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் தனுஷை உருவக்கேலி செய்த பலரும் தற்போது தனுஷின் தீவிர ரசிகர்களாக மாறிப் போயிருக்கின்றனர். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். மேலும் தனுசுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், ஜான்கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இந்த படத்திற்காக கதையை எழுத தொடங்கி இருந்தார். பின்னர் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு முழுமை அடைந்திருக்கும் நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக தொடங்கி இருக்கிறது.

தொடர்புடையவை  நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியானது உதயநிதி ஸ்டாலின்| தான்யா ரவிச்சந்திரன்| ஷிவானி ராஜசேகர் | அருண்ராஜா காமராஜா

கையில் துப்பாக்கி, தலையில் ர த் த காயம்.! கேப்டன் மில்லர் First லுக் போஸ்டர் வெளியானது.! 3
சில நாட்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் கேப்டன் மில்லரின் முதல் பார்வையை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனுஷ் ஒரு ராணுவ பிணக்குவியல்களுக்கு மத்தியில் கையில் துப்பாக்கி ஏந்தி, தலையில் ரத்த காயங்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த படம் இந்த வருட இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்த தனுஷ் “மரியாதை என்பது சுதந்திரம்” (Respect is Freedom) என்று கேப்ஷனுடன் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment