ஜோதிகா நடிக்கும் காதல் படத்தின் படபிடிப்பு தளத்திற்கு சூர்யா நேரில் சென்று இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் க்யூட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். கடைசியாக வெளிவந்த திரைப்படம் உடன்பிறப்பு இந்த படத்தில் அவர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தார் பொன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஜோதி தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் 36 வயதினிலே, ராட்டசி போன்ற படங்களில் நடித்தார். தற்போது சூர்யாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

உடன்பிறப்பு படத்திற்குப் பின்பு ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து, காதல் தி கோர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பட பூஜைகள் கடந்த மாதம் தொடங்கியது. இந்த படபூஜையில் பல முண்ணனி நடிகர்கள் கலந்து கொண்டனர். படத்தின் படபிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படபிடிப்பு தளத்திற்கு நேரடியாக விசிட் அடித்துள்ளார் சூர்யா.

அங்கு மம்முட்டி, ஜோதிகா, மற்றும் சூர்யா ஆகிய மூவரும் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் மனுஷன் ஜோதிகாவை எப்படி கையில் வச்சு தாங்குறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
.@Suriya_offl Arrived at the sets of #KaathalTheCore !!
We can expect a pic with @mammukka and #Jyothika anytime soon. pic.twitter.com/F62ohVCqjP
— ForumKeralam (@Forumkeralam2) November 9, 2022