பாலாஜி முருகதாஸ் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை வம்பிழுத்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் சீசன் நான்கில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கும் ஆரிக்கும் இடையே நடந்த சண்டை மிகப் பிரபலம். இவரை பலரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று அப்போது பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்ததால் இவர் வெளியேற்றப்படவில்லை. இவர் அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். இந்த சீசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. நேரடியாக hotstar-ல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீசனில் வின்னராக இவர் வந்தார். 35 லட்சம் பரிசு தொகையுடன் இவர் வெற்றி பெற்றார்.

வெளியே வந்த அவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு எந்த வாய்ப்புகள் கிடைக்காமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவருக்கு ரவீந்திரன் சந்திரசேகரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த படத்தின் பணிகளும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் போட்டு இருந்த ட்வீட் ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது. அவர் பதிவிட்டு இருந்த முதல் பதிவில் ரம்மியை காட்டிலும் ஆபத்தானது குடி தான். முதலில் மதுக்கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை காட்டிலும் குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
மதுவால் குடும்பத்தை இழந்தவர்களில் என்னைப்போல் தமிழ்நாட்டிலும் அனாதைகள் அதிகமாக இருக்கிறோம். என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். உங்களால் என்னை கையாள முடியாது என்று முதலைமைச்சர் முக ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ். தற்போது பாலாஜி முருகதாஸின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நீங்கள் சொல்ல வந்த கருத்து சரிதான் ஆனால் முதலமைச்சருக்கே சவால் விடும் அளவிற்கு சீன் இல்லை என்று காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.