பேட்டரி ஸ்கூட்டர்: மகேந்திரா அறிவிப்பு

ஸ்கூட்டரில் பேட்டரி மாடலை தயாரிக்க மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியா ஆட்டோ மொபைல் நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா தனது பிரபல மாடலான கஸ்டோ ஸ்கூட்டரில் பேட்டரி மாடல் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்கூட்டர் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இதன் பிறகு வணிக ரீதியாக விற்பனைக்கு வரும்.

பேட்டரி ஸ்கூட்டர்: மகேந்திரா அறிவிப்பு 1

இதில் 3 கிலோவாட் மோட்டார் உள்ளதால் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்லும். பேட்டரியை எளிதில் கழற்றி மாற்றும் வகையிலான நுட்பம் கொண்டது. எதிர்வரும் கஸ்டோ பேட்டரி ஸ்கூட்டரிலும் இதே நுட்பம் பின்பற்றப்படலாம் என்று தெரிகிறது. சுற்றுசூழலை பாதிக்காத வகையில் வாகனங்களை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

ஏற்கனவே, ஹீரோ குழுமம் ஹீரோ எலக்ட்ரிக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனம் சேடக் மாடலில் பேட்டரி ஸ்கூட்டரை தயாரிக்கிறது. சுஸுகி நிறுவனம் இந்த துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் மகேந்திரா நிறுவனத்தின் முடிவு கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்