தற்காப்புக்கான தாக்குதல்: ஈரான் விளக்கம்

ஈரான் நாட்டில் இருந்த அமெரிக்கா இராணுவ தாளவாடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்காப்பானது என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

அணு ஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக ஈரான்-அமேரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

விளம்பரம்
தற்காப்புக்கான தாக்குதல்: ஈரான் விளக்கம் 1
அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

இது சர்வதேச அளவில் மிக பெரிய விவாதமாக உருவெடுத்திற்கும் நிலையில், அமெரிக்க தளவாடங்களின் ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் 80 “அமெரிக்க பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.

இதே போல, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் “தற்காப்புக்காக” நடத்தப்பட்டது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment