Categories: சினிமா

“தேவையில்லாத கேள்விகள் கேட்ட பயில்வான்”!! கடுப்பான துல்கார் சல்மான்”!!

வெளியிட்டது

தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் தற்போது மலையாள நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிக்கா மாந்தனா என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “சீதா ராமம்”.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் வெளியிட்டு தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தேவையில்லாத கேள்விகள் கேட்ட பயில்வான்"!! கடுப்பான துல்கார் சல்மான்"!! 1

இப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, துல்கர் சல்மான் மற்றும் நாயகி மிருணாள் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த pressmeet event’ல வரவர பேசுனா சர்ச்சையா தான் பேசுவேன்னு  இருக்கு பயில்வான் ரங்கநாதனுக்கு பங்கெடுத்தார். அப்போது பேசும் போது, “படத்திற்கு சீதா ராமம்’னு பெயர் வெச்சுருக்கீங்க, படத்தில் உங்கள் பெயர் ராம் என்று சொன்னீங்க, அப்போ ராமம்னா என்ன?” என பயில்வான் குதர்க்கமாக கேட்க ,”ஒரு கதை’ல வர ரெண்டுபேர  பத்தி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா-ராமம் என்று வைத்துள்ளார்கள்” துல்கர் சமாளித்து பதில் கூறினார்.

ஆனால் பயில்வான் அப்படியும் பயில்வான் விடாம, “எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவனும்” என கேட்க, துல்கர் “கதையை நான் எழுதல, பெயர் பற்றி கூற இயக்குனர் இங்கு இல்லை, அவர் இருந்தால் சூழ்நிலை இப்படி இருக்காது” என மீண்டும் சமாளித்தார்.

மறுபடியும் விடாமல் நொண்டிய பயில்வான், “அப்போ அர்த்தமே தெரியாமல் படம் நடித்தீர்களா” என கேட்க, “நான் படத்தில் நடிக்கும் போது பெயர் வைக்கவில்லை, ஒரு மாதம் முன்பு தான் பெயர் வைத்தார்கள்” அப்போதும் சாந்தமாக சமாளித்து பதில் கூறினார். ஆனால் பதில் சொல்லும் போது கொஞ்சம் அவருடைய முகம் இறுகித்தான் போனது. இப்படி எல்லா இடத்துலயும் தேவையில்லாம சர்ச்சையை கிளப்பிவிடுறதுல நம்ப பயில்வனுக்கு என சந்தோசமனே தெரியல”

Video Courtesy – Youth Central Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்