“அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்”!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு”

அருள்சரவணன், ஊர்வசி ரௌட்டலா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகிபாபு என பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜே.டி – ஜெர்ரி இசையில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “தி லெஜெண்ட்”. இந்த ஆடம்பர விளம்பரங்களும், முதல் படத்திலேயே பான் இந்திய ரிலீஸ் வரை செல்லும் நடிகர் சரவணனின் நம்பிக்கையும் மக்களுக்கு படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வத்தை தூண்டியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

"அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்"!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு" 1

விளம்பரம்

அறிவிப்பு  வந்தது முதலே பல்வேறு எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களும் மத்தியில் தான் நடிகர் அருள்சரவணன் நடித்துள்ள “தி லெஜெண்ட்” படம் உருவானது. விளம்பர படத்தில் முதல் முறை தோன்றிய அவரை பல்வேறு வகையிலான கேலி கிண்டலுக்கு உள்ளாக்க, மீண்டும் மீண்டும் பல விளம்பரங்கள் நடித்தார். பின்னர் திடீரென அண்ணாச்சி சினிமாவில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்தது.

"அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்"!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு" 3

விளம்பரம்

சென்னை மட்டுமின்றி தமிழகத்தை பல்வேறு இடங்களில் தங்களுடைய ஜவுளி கடையை மிகவும் வெற்றிகரமா நடத்தி வரும் குடுமபம் சரவணா ஸ்டோரிஸ் குடும்பம். சென்னை டி.நகரில் ஒரு கடையில் துவங்கிய இவர்களுடைய கடை இப்பொது தமிழகம் எங்கும் பறந்து விரிந்துள்ளன. ஜவுளி கடைகள் மட்டுமின்றி மனிதனின் அத்தியாவசிய தேவை பொருள்கள் அனைத்துமே இவர்கள் கொண்டுள்ளனர். அதனை குடுமபத்தின் ஒரு வாரிசான அருள் சரவணன் இப்பொது சினிமாவிலும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

தொடர்புடையவை  A.R ரஹ்மானுக்கு ஏன் கூஜா தூங்குறீங்க? முட்டு கொடுக்காதீங்க.! தங்கர் பச்சானை சாடிய ப்ளூ சட்டை மாறன்

"அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்"!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு" 5

விளம்பரம்

ஒரே படம். பாலிவுட் நாயகி, சிறந்த இசையமைப்பாளர், மிக பெரிய நட்சத்திரங்கள், சிறந்த மேக்கிங் என எல்லா வகையிலும் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆடியோ லாஞ்ச் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக 10 நாயகிகளுடன் மேடையில் தோன்றிய சரவணன், “நான் எப்போதுமே சிங்கள் ஹீரோ தான்” என பேசியதும், “ரஜினி, விஜய் தான் என்னுடைய ரோல்மாடல்” என்றதும் பெரிய அளவில் பேசப்பட்டது. வெளியான ட்ரைலர் சரவணனை கலாய்க்க உதவினாலும், பலரும் படத்தின் மேக்கிங்கை பாராட்டினார்கள்.

"அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்"!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு" 7

விளம்பரம்

சென்னையில் நிறைய திரையரங்குகளில் அதிகாலை முதலே நாளை ஷோ போடவுள்ளார்கள். இது போக தற்போது சரவணனுக்கு மற்றொரு ஜாக்பாட் அடித்துள்ளது. படம் நாளை வெளிவரும் அதேதினத்தில் சென்னையில் மிக பெரிய அளவில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி துவங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரபல செஸ் விளையாட்டு வீரர்களும், மத்திய அரசியல்வாதிகளும், நேஷனல் மீடியாக்களும் சென்னை வரவுள்ளதால் அங்கங்கே நிறைய இடைஞ்சல்கள் இடையூறால் ஏற்படாமல் என கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடையவை  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

"அண்ணாச்சிக்கு அடிச்ச ஜாக்பாட்"!! பட ரிலீஸ் அன்று 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த அரசு" 9

விளம்பரம்

இதனால் லெஜெண்ட் சரவணனுக்கு தான் லக் அடித்துள்ளது. ஏனெனில் படம் வெளிவரும் அதே தினத்தில் வேறொரு காரணத்தில் விடுமுறை என்றாலும், வீட்டில் சும்மா இருக்கும் மக்கள் படம் பார்க்க திரையரங்கு நோக்கி வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு மிக பெரிய பிளஸ் பாயிண்டே.

விளம்பரம்

Leave a Comment