இறப்பில் சந்தேகம் உள்ளது, மெடிக்கல் சர்டிபிகேட் எங்கே? மீனா கணவர் இறப்பில் குண்டை தூக்கி போட்ட பயில்வான்

வெளியிட்டது

கடந்த வாரம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களையும், நடிகைகளையும் இழிவாக பேசி வருகிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். நடிகர் நடிகைகளின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யூடியூப்பில் தொடர்ந்து பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர் மேல் பலர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தகவல்களையெல்லாம் நானாக பேசவில்லை. பத்திரிக்கைகளில் வந்த செய்திகளில் உள்ளதைதான் கூறினேன் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் மீனாவின் கணவர் இறப்பு குறித்தும் அவதூறு கருத்துக்களை கூறினார். மீனாவின் கணவருக்கும் இடையே உள்ள சில பிரச்சினைகள் உள்ளதாக பேசினார்.

இறப்பில் சந்தேகம் உள்ளது, மெடிக்கல் சர்டிபிகேட் எங்கே? மீனா கணவர் இறப்பில் குண்டை தூக்கி போட்ட பயில்வான் 1

அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் மீனா பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். மகள் நைனிகா விஜய்யின் தெறி படத்தில் நடிப்பது கணவருக்கு பிடிக்கவில்லை. அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது என்று பயில்வான் கூறினார். உடல்நிலை சரியில்லாத கணவரை பெங்களூரில் இருந்து ஏன் சென்னைக்கு அழைத்து வந்தார்? ஏன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாதது ஏன்? இறந்து 12 மணி நேரங்கள் கழித்தும் ஏன் மருத்துவமனை அறிக்கை வெளியிடப்படவில்லை ஏன்? கொரோனா குணமாகிவிட்டதா இல்லை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதா? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார் பயில்வான். மேலும் சரத்குமார் மீனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் பயில்வான் கூறினார். மீனா திரும்பவும் நடிக்க சென்றதும், மகளை நடிக்க வைத்ததால் மீனா கணவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக சிலர் சந்தேகிப்பதாக அவர் கூறினார். Youtube Video Code Embed Credits: Paper Weight

இந்த செய்தியை கேட்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பயில்வானை விளாசித் தள்ளினார். மீனாவின் கணவர் இறப்பு பற்றி மெடிக்கல் சர்டிபிக்கேட் கேட்கிறான் பயில்வான், உனக்கு என்னடா ராஸ்கல் என்று கோபமாக கேட்டார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறான் ஒருவன் அது பயில்வான் ரங்கநாதன் தான் என்றும் போலீசில் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதை இப்படியே விட்டுவிட்டால் அவர் அனைத்து பெண்களையும், நடிகைகளையும் தவறாக பேசுவார் என்றும், இதெல்லாம் ஒரு பிழைப்பா? இப்படி பணம் சம்பாதிக்க வேண்டுமா என்று மிக கோபமாக கே.ராஜன் பேசினார். Youtube Video Code Embed Credits: Red Pix

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்