சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளை பற்றி தொடர்ந்து அவதூறு பேசி வரும் ஒரு நபராக பயில்வான் ரங்கநாதன் இருக்கிறார். பத்திரிகைகளில் வந்த செய்தியை தான் சொல்கிறேன் என்று அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வருகிறார். நடிகர், நடிகைகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். தற்போதைய காலத்தில் ஒருவரை பற்றிய கிசுகிசுக்களை கேட்பதற்கு பலர் ஆவலாக இருக்கின்றனர். அதை பயன்படுத்திக் கொள்ளும் பயில்வான் போன்ற ஆட்கள் பல youtube சேனல்களுக்கு சென்று நடிகர்களையும் நடிகைகளையும் ஆபாசமாகவும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி வருகிறார். இதற்காக அவருக்கு கணிசமாக பணமும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த செய்திகளுக்கு ஆதாரத்தை கேட்டால் நான் முன்பு ஒரு தடவை பத்திரிகைகள் வந்ததை தான் மேற்கோள் காட்டி பேசுகிறேன் என்று கூறி மழுப்பி விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பலர் இவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. இந்த நிலையில் இவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பிக்பாஸ் புகழ் ஓவியா குறித்து இவர் பேசி இருப்பது கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஓவியா பணத்திற்காக பார்ட்டி, பப் என ஊர் சுற்றி வருவதாகவும், போதைக்கு அடிமையாகி விட்டதாகவும் ஒரு காணொலியில் பேசி இருந்தார். இது மட்டுமில்லாமல் தொடர்ந்து அவர் கூறிய கருத்து மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் அடிக்கடி கர்ப்பம் தரிப்பதாகவும், இதனால் அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால் தான் அவரின் உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அவர் கூறினார். தான் ஒரு மருத்துவரிடம் உடல் எடை அடிக்கடி குறைவது குறித்து கேட்டபோது கருக்கலைப்பு மாத்திரை அடிக்கடி உட்கொண்டால் உடல் எடையை வெகுவாக குறையுமென்று மருத்துவர் தன்னிடம் கூறியதாகவும் பயில்வான் கூறினார்.
இந்த வீடியோ கடுமையான சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஓவியாவின் ரசிகர்கள் இதற்கு கடுமையான எதிர்வினைகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தனுஷ், பாடகி சின்மயி, பின்னணி பாடகி சுசித்ரா, மீனா கணவர் இறப்பில் சந்தேகம், ரேகா நாயர் ஆடை இல்லாமல் நடித்தது என்று தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களிடம் வம்பு இழுத்துள்ளார் பயில்வான். சமீபத்தில் வாக்கிங் சென்றபோது அவரை அடிக்கும் வரை சென்றிருந்தார் ரேகா நாயர் தொடர்ந்து இதுபோல ஒருவரின் அந்தரங்க விஷயங்களை மீடியாக்களில் பேசி நெகட்டிவ் விமர்சனங்களால் பிழைத்து வருகிறார் என்று பலரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Bee Talkies