ஜெஸ்ஸியை யாருனு தெரியாது என பல்டி அடித்த ஆதி, தம்பியை வெளுத்த சரவணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. ராஜா ராணி 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இது தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நடந்து வருகிறது. இந்த தொடரானது ஹிந்தியில் ஒளிபரப்பாகி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட என் கணவன் என் தோழன் நாடகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இதன் கதை போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் மருமகளுக்கு மாமியார் தடையாக இருக்கிறார். ஆனால் தனது மனைவியை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார் கணவர். தனது தாயின் எதிர்ப்பையும் மீறி தனது மனைவியை கணவன் சரவணன் போலீஸ் அதிகாரி ஆக்குகிறாரா? இல்லையா? என்பதுதான் இந்த நாடகத்தின் கதை.

ஜெஸ்ஸியை யாருனு தெரியாது என பல்டி அடித்த ஆதி, தம்பியை வெளுத்த சரவணன் 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தும், சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சந்தியாவாக நடிகை ஆல்யா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவது பிரசவத்திற்காக நாடகத்தை விட்டு விலக நேர்ந்தது. மேலும் இந்த நாடகத்தில் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த நாடகத்தில் அர்ச்சனாவிற்கு வளைகாப்பு நடப்பது காட்டப்படுகிறது. சரவணன் தம்பி ஆதியும், ஜெஸ்ஸியும் காதலித்து வந்தனர். நெருங்கி பழகியதால் ஜெஸ்ஸி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் கதையின் திருப்பமாக அர்ச்சனா வளைகாப்பிற்கு மேக்கப் போட வருகிறார் ஜெஸ்ஸி. அங்கு ஜெஸ்ஸி மயங்கி விழ அவர் கர்ப்பத்திற்கு காரணம் ஆதி தான் என்று அனைவரும் முன்பும் போட்டு உடைத்து விடுகிறார்.

தொடர்புடையவை  வருணுடன் சேர்ந்து கொண்டு ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட ஸ்ருதி.! இதோ வீடியோ.!

ஜெஸ்ஸியை யாருனு தெரியாது என பல்டி அடித்த ஆதி, தம்பியை வெளுத்த சரவணன் 3

விளம்பரம்

அடுத்து என்ன ஆகும் என்று பலரும் காத்திருக்கின்றனர். தன் மகன் மீது குற்றம் இருக்காது என்று அவருடைய தாய் சிவகாமி திடமாக நம்புகிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சரவணன் ஆதியின் கன்னத்தில் அறைந்து என்ன நடந்தது உண்மையை கூறு என்று கேட்க, அவர் எனக்கு இந்த பெண் யார் என்றே தெரியாது என்று கூறிவிடுகிறார். அதை சரவணன் நம்பி என் தம்பி அப்படி செய்திருக்க மாட்டான். அவன் மேல் சந்தேகப்பட வேண்டாம் என்று சந்தியாவிடமும் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below Video..

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment