குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்தவர் நடிகர் பிரித்திவிராஜ். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வந்த பப்லு பிரித்விராஜ் இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், நண்பர் வேடம், குழு நடிகன் என நடித்து வந்த இவர் இறுதியாக சீரியல்களில் தந்தை வேடத்தில் நடிக்க தொடங்கியிருந்தார். தற்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருப்பது இவருடைய இளம் மனைவி இவரை விட்டு பிரிந்ததுதான்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் உங்களுடைய இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 24 வயது ஷீத்தல் என்கிற பெண்ணை அறிமுகப்படுத்திய அவர், என்னை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது என்னுடைய மனைவி என்று ஷீத்தல் தான் என அறிமுகப்படுத்தியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது 57 வயதான பப்லுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஆட்டிசம் பாதித்த மகன் இருக்கும் நிலையில், மகன் வயது உள்ள பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டது நெட்டிசன்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது. மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதற்கு விளக்கம் வேறு அளிக்கிறீர்களா? என்று பப்லுவை பலரும் வறுத்து எடுத்து வந்தனர்.
தொடர்ந்து இணையத்தில் சர்ச்சைகளை இருவரும் சந்தித்து வந்தனர். ரீல்ஸ் வீடியோ போடுவது, ஜிம்மில் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்வது, சமைப்பது என ரொமான்டிக் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரித்திவிராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷீத்தல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து மொத்தமாக நீக்கி இருந்தார். மேலும் ரசிகர்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா என்ற எழுப்பிய கேள்விக்கு லைக்குகளையும் தட்டிவிட்டிருந்தார். எனவே இருவரும் பிரிந்து விட்டதாகவே ரசிகர்கள் பொருள் கொண்டனர். அதேபோல பிரித்திவிராஜ் தனது மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருந்தார்.
தற்போது இது குறித்து பிரபல திரை விமர்சகர் பயில்வான் கூறியுள்ளதாவது, பிரித்விராஜ் மற்றும் ஷீத்தல் இருவரும் தாலி கட்டாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அந்த பெண் புத்திசாலித்தனமாக ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. பிரித்திவிராஜும் அதை சொல்லவில்லை. இங்கிலீஷ்காரங்க மாதிரி வாழ்ந்து வந்தாங்க. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல இருவரும் தற்போது பிரிந்து விட்டதாக பயில்வான் விமர்சித்துள்ளார். அவரின் பேட்டியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sakthi Cine News