கயல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயல் வீட்டிற்கு வரும் போலீசார் ஆனந்தியிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். மேலும் ஆனந்தியிடம் பிரபு கொலை வழக்கு குறித்து கேட்க அவர் திரு திருவென முழிக்கிறார். பின்னர் ஆனந்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயல் சீரியலில் கயலும் அவரது தங்கை ஆனந்தியும் இணைந்து பிரபுவை கொலை செய்து அவரை புதைத்து வைத்து விட்டனர். இந்த வழக்கு தற்போது சூடு பிடிக்கிறது. கயலும் ஆனந்தியும் மாட்டுவார்களா இல்லையா என்பது குறித்து பரபரப்பு எழுந்திருக்கும் நிலையில், தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கயல் வீட்டிற்கு வரும் போலீசார் அவரின் தங்கை ஆனந்தியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்கு வரும் கயல் எங்களை எதற்காக கொண்டு செல்கிறீர்கள் எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற, சம்பந்தம் இருக்கிறது உங்கள் மேல் சந்தேகத்தின் பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதனால் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Sun TV