ஆயிஷாவை வாடி போடி என பேசிய அசீம்.! அசீமை கிழித்து தொங்க விட்ட ஆயிஷா.!

வெளியிட்டது

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதே பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 20 பேர் அளவிற்கு கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பி வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கின்றனர். குறிப்பாக திருநங்கை ஒருவருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயிஷாவை வாடி போடி என பேசிய அசீம்.! அசீமை கிழித்து தொங்க விட்ட ஆயிஷா.! 1

பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து சண்டை, பிரச்சனை என நீடித்து வருகிறது. முதல் நாளே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை பெற்று அந்த வாரத்திற்கான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை தனித்தனியாக விளையாட போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு அவர்கள் உணவு சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும் 4 பேரை நாமினேட் செய்து அவர்களை வெளியில் உள்ள பெட்டில் படுத்து உறங்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறுகிறார் இதனால் சண்டை ஏற்படுகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வரிசை படுத்தும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் 9வது இடத்தில் நிற்கும் ஆயிஷா வேஸ்ட் என்று அசீம் கூறுகிறார். அதற்கு ஆயிஷா காரணம் கேட்ட போது தூங்கி கொண்டே இருக்கிறார் என்று அசீம் சொல்ல சண்டை வெடிக்கிறது. அப்போது அசீம் ஆயிஷாவை போடி என்று சொல்ல ஆத்திரத்தில் கத்துகிறார் ஆயிஷா. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்