திடீரென சீரியலை முடித்த கலர்ஸ் தமிழ்.! அடுத்த வாரத்துடன் சீரியலுக்கு எண்டு கார்டு.!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் என்கிற மெகா தொடர் முடிவுக்கு வருவதாக தெரிகிறது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள இந்த தொடர் முடிவுக்கு வருவது அந்தத் தொடரின் ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளுக்கு பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகள் நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சியாக இருப்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்ணி ஒளிபரப்பாக தொடங்கிய சில நாட்களிலேயே ரசிகர்களின் பலரை கவர்ந்தது. பல தரமான நெடுந்தொடர்களை வழங்கியதன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது கலர்ஸ் தமிழ்.

திடீரென சீரியலை முடித்த கலர்ஸ் தமிழ்.! அடுத்த வாரத்துடன் சீரியலுக்கு எண்டு கார்டு.! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் திருமணம் என்னும் சீரியலை ஒளிபரப்பியது கலர்ஸ் தமிழ். இதில் நடிகர் சித்துவும் ஸ்ரேயாவும் நடித்து வந்தனர். பின்னர் இருவரும் காதலித்து தற்போது திருமணமும் செய்து கொண்டனர். இந்த நிலையில் அடுத்தடுத்து தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பு தொடங்கியது கலர்ஸ் தமிழ். அந்த வகையில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு “சில்லுனு ஒரு காதல்” என்கிற சீரியலை ஒளிபரப்பி வந்தது கலர்ஸ் தமிழ். இந்த நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிகர் சமீர் அகமதும், ஹீரோயினாக நடிகர் தர்ஷினி கௌடாவும் நடித்து வருகின்றனர். சூர்யா-கயல் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் இவர்கள் நடித்து வருகின்றனர். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பல ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலை தற்போது முடித்து எண்டு கார்டு போட இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" பிக்பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் விசித்ரா..!

திடீரென சீரியலை முடித்த கலர்ஸ் தமிழ்.! அடுத்த வாரத்துடன் சீரியலுக்கு எண்டு கார்டு.! 3
கதைப்படி சூர்யா மீது கோபத்தில் இருக்கும் கயல் அவரிடமிருந்து விலகி தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் டாக்டர் கதிரவனை கயல் சந்திக்கிறார். கதிரவனும் பார்ப்பதற்கு சூர்யா போலவே இருக்கிறார். இந்த விஷயம் கயலுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் கதிரவனை கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் வான்மதிக்கு உண்மை தெரியாமல் கதிரவனையும் கயலையும் பற்றி தவறாக புரிந்து கொள்கிறார். இதை சரி செய்வதற்காக கயல் எடுக்கப் போகும முடிவு உடன் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் சில்லுனு ஒரு காதல் கிளைமாக்ஸ் எட்ட இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

விளம்பரம்

திடீரென சீரியலை முடித்த கலர்ஸ் தமிழ்.! அடுத்த வாரத்துடன் சீரியலுக்கு எண்டு கார்டு.! 5

விளம்பரம்

Leave a Comment