பிக்பாஸ் வீட்டில் நடந்த கடுமையான சண்டை.! அடித்துக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்.! கைகலப்பாக மாறிய விளையாட்டு.!

வெளியிட்டது

கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 6. எப்போதும் இல்லாத அளவிற்கு தொலைக்காட்சியில் ஒரு மணி நேரமும், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரம் லைவ்வாக பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் 16 முதல் 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அதிகபட்சமாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஜி.பி. முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி தானாக முன்வந்து வெளியேறி விட்டார். எனவே இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் எண்ணி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடுமையான சண்டை.! அடித்துக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்.! கைகலப்பாக மாறிய விளையாட்டு.! 1

 

பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கின்றனர். குறிப்பாக திருநங்கை ஒருவருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து சண்டை, பிரச்சனை என நீடித்து வருகிறது. முதல் நாளே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை பெற்று அந்த வாரத்திற்கான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை தனித்தனியாக விளையாட போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு அவர்கள் உணவு சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

 

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது . இந்த போட்டி தொடங்கியது முதலே சண்டை ஆரம்பமானது. நேற்று மகேஸ்வரி பொம்மையை தனலட்சுமி எடுத்து வைத்து கொண்டு உள்ளே வைக்க மாட்டேன் என்று சொன்னதால் மகேஸ்வரி வெளியே அனுப்பப்பட்டார். தற்போது ப்ரோமோவில் ஷெரினாவை தள்ளிவிட்டதால் தனலட்சுமியை அசீம் திட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்