மஹாவை திட்டி ரவீந்தர் போட்ட பதிவு.! தப்பு பண்றீங்க என பதிலடி கொடுத்த மஹாலக்ஷ்மி.!

மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்தி இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமியும் பதில் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்தார். 2007ம் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். பின்னர் வில்லியாகவும் துணை வேடங்களிலும் நடித்து வருகிறார் மஹாலக்ஷ்மி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” என்ற சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தரை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மஹாவை திட்டி ரவீந்தர் போட்ட பதிவு.! தப்பு பண்றீங்க என பதிலடி கொடுத்த மஹாலக்ஷ்மி.! 1

விளம்பரம்

இவர்களது திருமணம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அடுத்தபடியாக மிக வைரலானது. அனைத்து தொலைக்காட்சி மற்றும் youtube இணையதளங்களிலும் இவர்களை அழைத்து பேட்டி எடுக்க தொடங்கினர். அதன் பின்னர் குலதெய்வ கோயிலுக்கு போவது, ரொமாண்டிக் ஆன புகைப்படங்களை வெளியிடுவது என்று என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இருவரும் சமீபத்தில் தலை தீபாவளியை கொண்டாடி இருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோரிஸ் கேரேஜ் என்ற காரை தனது மனைவி மகாலட்சுமிக்கு பரிசாக அளித்திருந்தார் ரவீந்தர். தொடர்ந்து ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு 90ஸ் கிட்ஸ்களை செல்லமாக கடுப்பேற்றி வருகிறார் ரவீந்தர்.

தொடர்புடையவை  கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா.! போட்டோக்களை பார்த்து அதிர்ந்த பாட்டி.!

மஹாவை திட்டி ரவீந்தர் போட்ட பதிவு.! தப்பு பண்றீங்க என பதிலடி கொடுத்த மஹாலக்ஷ்மி.! 3

விளம்பரம்

தற்போது மகாலட்சுமியின் செய்த ஒரு செயலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகாலட்சுமியின் மானத்தையே வாங்கி இருக்கிறார் ரவீந்தர். அதாவது மகாலட்சுமி முட்டை சமைப்பதற்காக ஒரு கிண்ணத்தில் போட்டு அதை அடுப்பில் வைத்திருக்கிறார். தண்ணீர் வற்றி சுண்டி அனைத்தும் காலி ஆகி முட்டையே கருகி விட்டது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், தனது மனைவியை சூப்பர் குக் என்றும் செல்லமாக கலாய்த்து அந்த பதிவை போட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமியும் ஹலோ ஹஸ்பண்ட் இது மிகவும் தவறான செயல் என்று அவரது கமெண்ட்க்கு பதில் அளித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment