பிக்பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 105 நாட்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் பிக்பாஸ் சீசன் 6 நிறைவடையே இருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய சீசன் 6 தற்போது மூன்று பேராக சுருங்கி இருக்கிறது. ஷிவின், அமுதவாணன், மைனா, விக்ரமன், அசீம் என ஐந்து போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில் அமுது பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற, மைனாவை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். இறுதி வாரம் என்பதால் முன்பு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதித்திருந்தனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி மட்டும் உள்ளே வரவில்லை. மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உள்ளே வந்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பணமூட்டை வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை வித்தியாசமாக இரண்டு முறை பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பணம் மூட்டை வைக்கப்பட்டு, மூன்று லட்சத்துடன் பேரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேரத்தை விறுவிறுப்பாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதிரவன் உடனடியாக மூன்று லட்ச ரூபாய் எடுத்து அந்த டாஸ்கையே சுவாரஸ்யத்தை குறைத்து விட்டார். எனவே மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அனைத்து சீசன்களிலும் பணப்பெட்டி டாஸ்க் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பும் போட்டியாளர்கள் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படும் வரை காத்திருந்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அதிகபட்ச பணமாக இருந்த நிலையில் தற்போது அமுதவாணன் 11,75,000 ரூபாயை எடுத்துச் சென்று இருக்கிறார் அமுதவாணன். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக மைனாவை மிட் வீக் எலிமினேஷன் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மூன்று பேரும் தங்களுக்கு வாக்களிக்க சொல்லி மக்களிடம் பேசுவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டுள்ளது பிக்பாஸ். இந்த சீசனில் மட்டும் தான் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television