“எங்களுக்காக வேண்டிக்கோங்க” புதிதாக பிறந்த மகனின் புகைப்படத்தை பகிர்ந்து RK சுரேஷ் உருக்கம்.!

புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாக ஆர்.கே சுரேஷ் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். மேலும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் அவர் இணையத்தில் பதிவிட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரை உலகில் நடிகரும் தயாரிப்பாளருமாக இருப்பவர் ஆர் கே சுரேஷ். இது மட்டுமல்லாமல் படங்களை வெளியிடும் உரிமையை கூட இவர் பெற்றிருக்கிறார். சமீபத்தில் விஜய் தேவார கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தைக் கூட தமிழில் இவர் தான் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். ஆர் கே சுரேஷ் முதன்முறையாக “தாரை தப்பட்டை” என்கிற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மருது, இப்படை வெல்லும், விருமன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த படங்களான பில்லா பாண்டி, விசித்திரன் ஆகியவை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

"எங்களுக்காக வேண்டிக்கோங்க" புதிதாக பிறந்த மகனின் புகைப்படத்தை பகிர்ந்து RK சுரேஷ் உருக்கம்.! 1
பின்னர் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்திற்கு திரும்பிய அவர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இயக்கிய விருமன் படத்திலும், அதர்வாவின் பட்டத்து அரசன் என இரண்டு படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் ஆர்.கே சுரேஷ் ஆர் கே சுரேஷும், பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் சுரேஷ் 2020 ஆம் ஆண்டு மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரேயா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஆர் கே சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவிக்கு மிகப்பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி இருந்தார் ஆர்கே சுரேஷ். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது .

விளம்பரம்
தொடர்புடையவை  "என்னடா வரவன் எல்லாம் என்ன பத்தி தப்பாவே சொல்றானுங்க.!" புலம்பித் தள்ளிய விஷ்ணு.!

"எங்களுக்காக வேண்டிக்கோங்க" புதிதாக பிறந்த மகனின் புகைப்படத்தை பகிர்ந்து RK சுரேஷ் உருக்கம்.! 3
கௌதம் கார்த்திக், இயக்குனர் மிஷ்கின், விமல், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலரும் அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஆர்கே சுரேஷுக்கு தற்போது இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார். வழக்கம் போல பிரபலங்கள் செய்வது போல முகத்தை மறைத்து அவர் அந்த புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார். மேலும் குழந்தைக்கு பிறந்த உடனேயே மூச்சுத் திணறல் பிரச்சனை இருந்ததாகவும் தற்போது குழந்தை நன்றாக இருப்பதாகவும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவுக்கு கீழே அவரது ரசிகர்கள் நாங்கள் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம் அண்ணா, கவலைப்படாமல் இருங்கள் என்று ஆர் கே சுரேஷ்-க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment