அமீருக்கு ஜோடியாக ஆடிய கேபி..டேனியுடன் கைகோர்த்த பாவனி..ஜோடிகளில் மாற்றமா?

வெளியிட்டது

தமிழில் பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்களை நடத்தி முடித்துள்ளது. மூன்று சீசன்கள் வரை விறுவிறுப்பாக நடந்த நிலையில் 4வது, 5வது சீசன்கள் சுணக்கமாக ஓடின. பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவிதமான நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வண்ணம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கும் பெரிய அளவில் வரவேற்பில்லை. ஏன் கமலஹாசனே ஒரு கட்டத்தில் வெளியேறிவிட சிம்பு மீதி நாட்களை தொகுத்து வழங்கினார். வீடியோ கீழே உள்ளது

அமீருக்கு ஜோடியாக ஆடிய கேபி..டேனியுடன் கைகோர்த்த பாவனி..ஜோடிகளில் மாற்றமா? 1

தற்போது சீசன் 6-க்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணன் நடுவராக பங்கேற்று உள்ளார். தற்போது சீசன்2 நடந்து வருகிறது. இதில் அமீர், பாவனி, தாமரை, இசைவாணி, ஐக்கி, ஸ்ருதி, டேனி, போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Vijay Television

இதில் டேனிக்கு ஜோடியாக வந்தவர் சில காரணங்களால் நிகழ்ச்சியை விட்டு விலகியுள்ளார். இதனால் விளையாட்டுக்காக பாவனியை அழைத்து டேனி ஆடுகிறார். பிறகு டேனிக்கு ஜோடியாக சர்பிரைஸ் என்ட்ரியாக கேபி வருகிறார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேபி அமீருடன் இணைந்து ஆடுகிறார். இதனால் ஜோடிகளில் மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேபி அமீருடன் ஆடியதால், இனி பாவனி டேனியுடன் ஆடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படியே ஜோடிகளில் மாற்றம் இருந்தால் இனி இந்த நிகழ்ச்சியை பார்க்கப் போவதில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்