பிக் பாஸ் சீசன் 7க்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் விசித்ராவிற்கும் பயங்கர சண்டை எழுந்துள்ளது் விசித்ராவை ஜோவிகா பயங்கரமாக கேள்விகளால் மடக்குகிறார். இதை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் கைதட்டி விசித்ராவை மேலும் கடுப்பாக்குகின்றனர். விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் சீசன் 7. 18 போட்டியாளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எட்டு போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் என்கிற வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீட்டை இரண்டாகப் பிரித்து இது போன்ற டாஸ்கை பிக் பாஸ் கொடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது, அங்கு இருப்பவர்கள் தான் மீதமுள்ள அனைவருக்கும் உணவு சமைத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் அமர்ந்து விவாதம் போல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜோவிகா படிப்பு பற்றி நான் எந்த கருத்தையும் திணிக்கவில்லை. குறைந்தபட்சம் 12 வது வகுப்பு படிக்க வேண்டும் என்பதைத்தான் நான் அறிவுறுத்தினேன் என்று விசித்ரா கூறுகிறார். அப்போது ஜோதிகா எழுந்து படிக்காதவர்கள் எல்லாம் இங்கு வாழ முடியவில்லையா? என்ற ரீதியில் கத்துகிறார்.
அவரின் இந்த பேச்சை ஆதரிக்கும் விதமாக ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன் போன்றவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதை பார்க்கும் விசித்ரா கோபத்தில் உறைகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television