வனிதா பொம்மையை வீசி எறிந்த நிரூப்.. செம்ம கடுப்பில் வனிதா | BiggBoss Ultimate Promo 1

வெளியிட்டது

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பு ஆகும் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால் பழைய சீசன்களைப் போல இல்லாமல் இதை டிவியில் ஒளிபரப்பு செய்யாததால் பலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஆனாலும் அனைத்து ஞாயிறு கிழமைகளில் அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை மூன்று மணி நேர தொடர் ஒளிபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

வனிதா பொம்மையை வீசி எறிந்த நிரூப்.. செம்ம கடுப்பில் வனிதா | BiggBoss Ultimate Promo 1 1

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். இதில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.பிக்பாஸ் அல்டிமேட் கமல் ப்ரோமோ வெளியான போதே சுவரை கொஞ்சம் உயர்த்தி கட்டுங்கள் என்று பரணியை மறைமுகமாக கூறியது போன்று இருந்தது.எனவே பரணி கண்டிப்பாக கலந்து கொள்வார் என்ற கருத்தும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதே போல் ஓவியா தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால் உடனே பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப் படுவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தலைவர் பதிவுக்காக டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் கார்டன் ஏரியாவில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் குழந்தையை தொட்டிலில் போடா வேண்டும். யார் குழந்தை பொம்மை தொட்டிலில் இல்லையோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

 

ஸ்ரீ ஹரி

From the political arenas of Chennai to the serene temples of Thanjavur, my reporting is shaped by the sights, sounds, and stories that define the soul of Tamil Nadu.

வெளியிட்டது

புதிய செய்திகள்