இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய அந்த 6 பேர்.! எஸ்கேப் ஆன மாயா, விசித்ரா, பூர்ணிமா.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 71 நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் மாயா, பூர்ணிமா, விசித்ரா ஆகியோர் தப்பித்திருக்க மீதம் ஆறு பேர் இந்த முறை நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த வாரம் எலிமினேஷனை ரத்து செய்து விட்டதால் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனா? அல்லது மூன்று எலிமினேஷனா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய அந்த 6 பேர்.! எஸ்கேப் ஆன மாயா, விசித்ரா, பூர்ணிமா.! 1

ஆனால் நாமினேட் ஆகி இருக்கும் போட்டியாளர்களை பார்த்தால் அனைவரும் நன்றாக விளையாட கூடியவர்கள், கண்டன்ட் கொடுப்பவர்கள் என்பதால் பிக் பாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஐந்து வார காலமே மீதம் இருப்பதால் 13 நபர்கள் மிக அதிகமான எண்ணிக்கையை கொண்டதாக இருக்கிறது. இதனால் இரண்டு, இரண்டு பேர்களாக வெளியேற்றப்படுவார்களா? அல்லது இந்த வாரமே மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த வாரம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக எலிமினேஷனை ரத்து செய்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். கடந்த வாரம் எலிமினேஷன் வைக்கப்பட்டிருந்தால் நிக்சன் வெளியேறி இருப்பது உறுதியாகி இருக்கும். ஆனால் நிக்சன் கடந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தார். இந்த வாரம் மணி கேப்டனாக மாறிய நிலையில் அவரையும் நாமினேட் செய்ய முடியவில்லை. சரவண விக்ரம் கோல்டு ஸ்டாரை வென்றதனால் அவரும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்திருக்கிறார்.

மீதம் இருந்த போட்டியாளர்களில் அர்ச்சனா, தினேஷ், அனன்யா, நிக்சன், விஷ்ணு, கூல் சுரேஷ் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகமாக எழுந்து இருக்கிறது. ஒரு வேளை இரட்டை வெளியேற்றும் என்றால் அனன்யா, கூல் சுரேஷ் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ லிங்க்கை பயன்படுத்தி வாக்களிக்கவும்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்