பிக்பாஸ் சீசன் 7ன் இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வெறும் மூன்று பேர் மட்டுமே நாமினேஷனில் வசமாக சிக்கி இருக்கின்றனர். அர்ச்சனா, தினேஷ், நிக்சன், மாயா போன்ற பலர் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து 78வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இன்னும் சில தினங்களே மீதம் இருப்பதால் போட்டியாளர்களில் யார் வெளியேறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர்.

கடந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் ரவீனா நடந்து கொண்டது பற்றி கமலஹாசன் கூட அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதை காரணமாக காட்டி மாயா, நிக்சன், விக்ரம், விஜய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் ரவீனாவை நாமினேட் செய்திருந்தனர். அதேபோல விக்ரமை ‘கரப்பான் பூச்சி’ என்று பட்டப்பெயர் வைத்து மற்ற போட்டியாளர்கள் அழைத்த போது கூட அவர் தனக்காக நிற்கவில்லை மற்றும் இன்னொருவரை சார்ந்தே கேம் விளையாடுகிறார் என்ற காரணங்களை சொல்லி விக்ரமை விசித்ரா, விஷ்ணு, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்து இருந்தனர். சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் என்று சொல்லி விசித்ராவை மாயா, பூர்ணிமா, தினேஷ் ஆகிய மூவரும் நாமினேட் செய்திருந்தனர்.
இது மட்டுமல்லாமல் மாயா, மணி, விஜய் ஆகியோருக்கு தலா இரண்டு ஓட்டுகளும், பூர்ணிமா, விஷ்ணு, நிக்சன், தினேஷ் ஆகியோருக்கு தலா ஒரு ஓட்டுகளும் கிடைத்தது. இதனால் இவர்கள் அனைவருமே நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். இரண்டு வாரங்களாக வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்து இருந்தால் நிக்சன் இந்த முறையும் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார். எனவே இந்த வாரம் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் என மூவர் மட்டுமே நாமினேஷனில் வசமாக சிக்கி இருக்கின்றனர். இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நீங்களும் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி வாக்களிக்கவும்.! https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/