அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது. முதல் ப்ரோமோ வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கமல் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு தான். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கின்றனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது பிக்பாஸ். அதற்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ்க்கு இணையான ரசிகர் கூட்டம் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இருப்பது போல் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இரு அணிகளாக பிரிந்து கொண்டு சண்டை போடுவதும், ஆர்மிகள் தொடங்குவதுமாகவும் இருக்கின்றனர் ரசிகர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. தற்போது சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் பீட்சில் நின்று கொண்டு விரைவில் பிக் பாஸ் வர இருக்கிறது என்று கமல் அறிவித்திருந்தார். அதன் பின்னர் இன்று புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது பிக்பாஸ் டீம். எப்பொழுதும் ஒரு பிக்பாஸ் வீடு, 12 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்படும். ஆனால் கடந்த சீசன் 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சீசன் இரண்டு வீடும் 20 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒரு வீடாக இருக்கும் பொழுதே வீடு ரெண்டாகி விடும். இப்பொழுது இரண்டு வீடு வரப் போகிறது என்று கமல் அந்த ப்ரோமோவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television