சஞ்சீவின் 34-வது பிறந்தநாள்.! விலையுயர்ந்த Gift ஒன்றை வாங்கி பரிசளித்த ஆலியா.! என்னனு பாருங்க.!

பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தற்போது தனது கணவரின் பிறந்தநாளுக்கு உயர்ரக கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த சஞ்சீவ் ஆலியாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. சஞ்சீவ் கார்த்திக் இஸ்லாமிய மதத்தவர் என்பதால் ஆலியாவின் வீட்டில் இவர்களது வீட்டிற்கு சம்மதிக்கவில்லை. எனவே இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

சஞ்சீவின் 34-வது பிறந்தநாள்.! விலையுயர்ந்த Gift ஒன்றை வாங்கி பரிசளித்த ஆலியா.! என்னனு பாருங்க.! 1

விளம்பரம்

தற்போது சஞ்சீவும் ஆலியாவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதற்கு சாட்சியாக அவர்களுக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும், அர்ஷ் என்கிற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஆலியா தனது குடும்பம் குறித்தும் பிள்ளைகள் பற்றியும் ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் youtube சேனல் ஒன்றையும் தொடங்கிய அவர்கள் அடிக்கடி Vlog வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆலியா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல சஞ்சீவும் சன் தொலைக்காட்சியில் கயல் என்கிற சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது சஞ்சீவி பிறந்தநாள் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கு சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நண்பர்கள் பலரும் கேக் வெட்டி சஞ்சீவின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். அதேபோல ஆலியா மானசா தற்போது தனது கணவருக்கு ஒரு உயர் ரக கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். மகேந்திராவின் தார் ஜீப்பை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த காரின் மேல் சஞ்சீவ் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது மனைவி ஆலியாவுக்கு நன்றியும் கூறி இருக்கிறார் சஞ்சீவ். பலரும் சஞ்சீவின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.!

விளம்பரம்

Leave a Comment