பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 62 நாட்கள் முடிவடைந்துள்ளது. 62வது நாள் ப்ரோமோவில் தற்போது நிக்ஸனுக்கு எதிராக மணி அடித்து விட்டு தற்போது நிக்ஸனுக்கு ஆதரவு கொடுக்கும் மாயாவை கமல் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். அந்த அதிரடி ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி 23 போட்டியாளருடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 14 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையும் ஒன்பது போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பத்தாவதாக இன்று ஒரு எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. வனிதா மகள் ஜோவிகா போட்டியிலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் கடந்த வாரம் கேப்டனாக இருந்த நிக்ஸன் மீது மாயா குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். தனக்கு அநீதி நடந்து விட்டதாக மாயா மணி அடித்து குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமலஹாசன் நிக்ஸனுக்கு யாரெல்லாம் ஆதரவளிக்கிறீர்களோ அவர்கள் ஒரு பக்கம் வந்து அமருமாறு கூறுகிறார். அப்போது மாயாவும் நிக்ஸனுக்கு ஆதரவு தரும் இடத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார். இதை பார்க்கும் கமலஹாசன் நீங்கள் என்ன இப்போது இங்கு வந்து அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் மாயா திணறுகிறார்.
அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television