சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்குறீங்க.? வன்ம குடோனா இருக்கு இந்த வீடு.! வெளுத்து வாங்கும் கமல்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கமலஹாசன் ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். “என்டர்டைன்மென்ட் செய்வதற்காக வந்த நீங்கள் அதை விட்டுவிட்டு, வன்மத்தை மட்டுமே கக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று அவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் திணறிக் கொண்டிருக்கின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்குறீங்க.? வன்ம குடோனா இருக்கு இந்த வீடு.! வெளுத்து வாங்கும் கமல்.! 1
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நிறைவு செய்கிறது. இருப்பினும் எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் வெறும் சண்டை, சச்சரவு மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. டாஸ்க்குகளும் பெரிய அளவில் சுவாரசியமாக இல்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே பிடித்த சண்டை பெரும் சர்ச்சையானது. நிக்சன் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸைப் பார்த்து ‘சொருகி விடுவேன்’ என்று பேசியது இணையத்தில் பெரும் வைரலானது. இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமலஹாசன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் நேற்றைய எபிசோடில் நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகியோரை வெளுத்து வாங்கியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் ஹவுஸ்மேட்ஸிடம், “இந்த வீட்டில் என்டர்டைன்மென்ட் இருக்கா? சரி ஒரு டாஸ்கையாவது சுவாரஸ்யமாக செய்கிறீர்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, எதற்காக வந்தோம் என்பதே மறந்துவிட்டு வன்ம குடோனாக மாறிவிட்டீர்கள். நீங்களே உங்களை மதிக்கவில்லை என்றால் இவர்கள் எதற்கு உங்களை மதிக்க வேண்டும்? சாப்பிடும் போது கூட வன்மத்தை காட்டுகிறீர்கள்” என காட்டமாக பேசுகிறார். அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் அமைதியாக அமர்ந்துள்ளனர். அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்